விழுப்புரம் நகராட்சி 13-வது வார்டுக்கு உட்பட்ட ஜி.ஆர்.பி. மற்றும் நந்தனார் தெருவில் உள்ள தெரு மின்விளக்குகள் பழுதடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் அப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.