புதுக்கோட்டை மேல ராஜ வீதி பழனியப்பா முக்கம் பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வாகனம் மோதிபோது சேதமடைந்து எப்போது, வேண்டுமானும் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மின்வாரியத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பெரிய அசம்பாவிதம் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் அந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.