சென்னை பெருங்குடி, வி.பி.கே. தெருவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து உள்ளது. எனவே எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் கம்பத்தை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.