செங்கல்பட்டு மாவட்டம், பெருமட்டுநல்லூர் ஊராட்சி, அண்ணா நகர் முதல் கன்னிவாக்கம் வரை உள்ள சாலையில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி ழுழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. மேலும், அடிக்கடி விபத்தும், திருட்டு சம்பவமும் அரங்கேறுகிறது. எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் மின்விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.