எலும்பு கூடான மின்கம்பம்

Update: 2024-01-07 12:01 GMT

புதுக்கோட்டை மாவட்டம், 9A நத்தம் பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு பாலன் நகர் பகுதியில் உள்ள ஜே.ஜே. வீதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் ஒன்று சிதிலமடைந்து எலும்பு கூடுபோல் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பலத்த காற்று அடிக்கும்போது இந்த மின்கம்பம் எளிதில் முறிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்