முக்காணி ரவுண்டானா காமராஜர் நகர் மாரியம்மன் கோவில் தெருவில் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து விழுந்ததால், பலத்த காற்றில் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.