மந்தாரக்குப்பம் அடுத்த வடக்குவெள்ளூர் அருகே சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தை சுற்றி செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் தற்போது மின்கம்பமே தெரியவில்லை. சில நேரங்களில் காற்று அதிகமாக வீசும்போது மின்கம்பிகளை செடி, கொடிகள் உரசுவதால் தீப்பொறி ஏற்படுகிறது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். ஆகவே அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்கம்பத்தை சூழ்ந்துள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.