மின் விளக்குகள் சரி செய்யப்படுமா?

Update: 2023-12-31 11:58 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின் விளக்குகள் அடிக்கடி எரியாமல் இருக்கிறது. இதனால், அந்த பகுதி வழியாக இரவு நேரங்களில் பொதுமக்கள் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த பகுதியில் அதிக அளவு திருட்டு சம்பவங்களும் அரங்கேறுகிறது. எனவே, மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்