செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூர் 58-வது வார்டு காந்தி தெரு சந்திப்பில் உயர் மின் கோபுர விளக்கு ஒன்று உள்ளது. இந்த விளக்குகளை சுற்றி செடி, கொடிகள் அடர்ந்த புதர் போல வளர்ந்தது உயர் கோபுர மின்விளக்கு எங்கு உள்ளது என தெரியாத அளவுக்கு உள்ளது. இதனால் அந்த பகுதி இருளில் மூழ்கி காணப்படுகிறது. அடிக்கடி திருட்டு சம்பவங்களும் அரங்கேறுகிறது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் உயர் மின் கோபுர விளக்குகளை சுற்றியுள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.