சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-12-24 08:41 GMT

ஆலத்துறையில் இருந்து கஞ்சிகுழிக்கு செல்லும் சாலையில் நுள்ளிவிளை உள்ளது. இந்த பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தின் சிெமண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்ைத நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்