திட்டக்குடி தாலுகா அரியநாச்சி கிராமம் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள மின்கம்பம் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் மிகவும் பலவீனமடைந்து காணப்படுவதால், எப்போது வேண்டுமானாலும் விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிதாக மாற்றித்தர வேண்டும்.