பாலகிருஷ்ணாபுரம் அன்னை கார்டன் பகுதியில் உள்ள தெருக்களில் தெருவிளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் அந்த தெருக்கள் இரவு நேரத்தில் இருளில் மூழ்கி கிடக்கின்றன. இதனை பயன்படுத்தி சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். பெண்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு வசதியை விரைந்து ஏற்படுத்திக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.