செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட நெல்லிக்குப்பம் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பம் மிகவும் மோசமாக உள்ளது. இதன் அருகில் தனியார் வங்கி இருப்பதால் அதிகமான மக்கள் அந்த பகுதி வழியாக செல்கின்றனர். எனவே, விபத்து ஏற்படுவதற்கு முன் மின்வாரிய துறை அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.