புதிய மின்மாற்றி தேவை

Update: 2023-12-10 14:31 GMT

ஆலங்குளம் தாலுகா ஓடைமறிச்சான் பஞ்சாயத்து கொல்லங்குளத்தில் மின்மாற்றி சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்மாற்றியின் 2 மின்கம்பங்களிலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் பலத்த காற்றில் மின்மாற்றி சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்மாற்றியை அகற்றி விட்டு, புதிய மின்மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா.?

மேலும் செய்திகள்