நிலக்கோட்டை தாலுகா மட்டப்பாறை ஆதிதிராவிடர் காலனியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. அதன் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கட்டிட கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிதாக மின்கம்பம் அமைக்க வேண்டும்.