கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்டப்பள்ளி- சின்னத்தள்ளப்பாடி நெடுஞ்சாலை வழியில் காமராஜர்நகரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதன் அருகே அமைந்துள்ள மின்கம்பம் நீண்ட நாட்களாக சேதமடைந்து உள்ளது. மழை காலங்களில் பலத்த காற்று வீசினால் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?