பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பம் கடைவீதியில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையோரத்தில் மின்மாற்றி அமைந்துள்ளது. இந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் கம்பங்கள் பலத்த சேதமடைந்து, சிமெண்டு காரைகள் பெயா்ந்து கீழே விழுந்து வருகிறது. இதனால் மின்கம்பம் தற்போது மிகவும் பலவீனம் அடைந்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே மின்விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.