நத்தத்தில், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடப்பட்ட மின்கம்பங்களில் இணைக்கப்பட்டிருக்கும் மின்கம்பிகள் சாலையோர மரக்கிளைகளை ஒட்டியபடி தாழ்வாக செல்கின்றன. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பிகள் மீது படும் மரக்கிளைகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.