திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் காரனோடை ஜி.என்.டி. சாலையில் உள்ள 4 மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால், உயிர் சேதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே மின்வாரிய துறை அதிகாரிகள் புதிய மின்கம்பங்கள் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.