கோவில்பட்டி- கடலையூர் ரோட்டில் லிங்கம்பட்டி காலனியில் இருந்து காட்டுராமன்பட்டி வரையிலும் மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் அங்கு விஷ பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. எனவே அங்கு மின்விளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.