செங்கல்பட்டு மாவட்டம், ஒரத்தி பேருந்து நிலையத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு ஒரு மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இருளை பயன்படுத்தி சமூக விரோதிகள் வழிப்பறியில் ஈடுபடும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உயர்கோபுர மின்விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
