சேலம் சித்தர்கோவில்-கே.ஆர்.தோப்பூர் செல்லும் வழியில் ரெட்டியூர் நுழைவு வரையும், வெள்ளைபிள்ளையார் கோவிலில் இருந்து கோட்டைமேடு வரும் வழியில் மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் போதுமான வெளிச்சம் இல்லாமல் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த மின்கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுப்பார்களா?
-சசி, சேலம்.