பாளையங்கோட்டை அருகே இட்டேரியில் இருந்து ஆலங்குளத்துக்கு செல்லும் வழியில் உள்ள பெரும்பாலான மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. மின்கம்பங்களின் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பங்கள் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த ஆபத்தான மின்கம்பங்களை அகற்றி விட்டு, புதிய மின்கம்பங்களை அமைக்க வேண்டுகிறேன்.