ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-10-22 14:34 GMT

கோபி அருகே பாரியூர் நஞ்சகவுண்டம்பாளையம் தபால் நிலைய சந்தில் உள்ள காந்தி கவுண்டர் வீதியில் மின்கம்பம் உள்ளது. இதிலுள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழலாம். ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை உடனே மாற்றி அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்