திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, அணைக்கட்டுச்சேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜே.ஜே. நகரில் உள்ள விவசாய தோட்ட பகுதியில் ஒரு மின்கம்பத்தில் வயர் அறுந்த நிலையில் கிடக்கிறது. இதனால் அந்த பகுதி வழியாக வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் மின்கம்பத்தின் வயரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.