குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி இருக்கும் பகுதியில் உள்ள மின்கம்பம் பலத்த சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சொல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் ஒருவித அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே அசம்பாவிதம் நிகழும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தி விட்டு, புதிதாக மாற்றி அமைக்க வேண்டும்.