செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம் சேலையூர், ராஜேஸ்வரி நகர், தனலெட்சுமி தெருவில் உள்ள மின்கம்பத்தில் மின்இணைப்பு பெட்டி சேதமடைந்து நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் மின்கம்பம் அருகில் செல்லும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சரி செய்து தரவேண்டும் என் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.