திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் டி.ஆர்.பி.சி.சி. பள்ளி அருகில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இருளை பயன்படுத்தி சமூக விரோதிகள் வழிப்பறியில் ஈடுபடும் சூழ்நிலையும் உருவாகி உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உயர்கோபுர மின்விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.