சிதம்பரம் லால்கான் தெரு மசூதி அருகே உள்ள மின்கம்பம் வளைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் இதில் உள்ள தெருமின்விளக்கு பகல் நேரத்திலும் எரிந்து கொண்டே இருக்கிறது. மேலும் மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே சாய்ந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தி விட்டு, புதிதாக மாற்றித்தர வேண்டும்.