இருண்ட பாலத்திற்கு ஒளி கிடைக்குமா?

Update: 2023-10-08 11:48 GMT
இருண்ட பாலத்திற்கு ஒளி கிடைக்குமா?
  • whatsapp icon

இருண்ட பாலத்திற்கு ஒளி கிடைக்குமா?

திருப்பூர் மாநகரில் வாகன போக்குவரத்து நிறைந்த சாலைகளில் பொதுமக்கள் எளிதாக சாலையை கடக்கும் வகையில் நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புஷ்பா ரவுண்டானா, ரெயில் நிலையம், டவுன்ஹால், பார்க் ரோடு, நல்லூர் ஆகிய இடங்களில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான பாலங்கள் இரவு நேரங்களில் மின்விளக்குகள் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. திருப்பூர் பார்க் ரோட்டில் அமைந்துள்ள நடை மேம்பாலத்தில் பல மாதங்களாக மின் விளக்குகள் எரியாமல் இருக்கின்றன. இதன் காரணமாக சிலர் இரவு நேரங்களில் இந்த பாலத்தை மது அருந்தும் இடமாகவும், சமூக விரோத செயல்களுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே நடை மேம்பாலங்களில் தேவையான மின் விளக்குகளை பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கந்தவேல்,திருப்பூர்.

98755 65373

மேலும் செய்திகள்