சேத்தியாத்தோப்பு வடக்கு சென்னிநத்தம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மின்கம்பத்தை சூழ்ந்து செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இந்த நிலையில் காற்று அதிக அளவில் வீசும்போது, செடி-கொடிகள் மின்கம்பிகளின் மீது உரசுவதால் தீப்பொறி ஏற்படுகிறது. எனவே விபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை சூழ்ந்த செடி-கொடிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?