ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-10-01 18:06 GMT

பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் பஞ்சாயத்து கே.டி.சி.நகர் வடபகுதியில் உள்ள விஜயதுர்க்காபுரி நகர் 7-வது தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, விரிசல் விழுந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்