மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-10-01 13:26 GMT

திருவாரூர் தெற்குவீதி சாலையோரத்தில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி காணப்படுகிறது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் சூழல் நிலவுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பராமரிப்பின்றி உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்