செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் வட்டம் கருநிலம் ஊராட்சியில் மாதத்திற்கு 20 நாட்கள் சுமார் 5 மணி நேரம் அடிக்கடி மின்தடை எற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தினசரி அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இல்லத்தரசிகள் காலையில் தங்கள் வேலைகளை முடிப்பதற்கு தடையாக உள்ளது. எனவே மின்சாரத் துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.