புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி 1-வது வார்டுக்கு உள்பட்ட பகுதியில் தெருவிளக்குகள் எரியாமல் இருந்தது. இதுபற்றிய செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து 1-வது வார்டுக்கு உள்பட்ட பகுதியில் தெருவிளக்குள் எரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.