அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட புன்னார் குளத்தின் அருகில் கூண்டுபாலத்தில் ஒரு மின்கம்பம் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் காணப்பட்ட மின்கம்பத்தால் அந்த வழியாக செல்லும் மக்கள் அச்சத்துடனேயே கடந்து சென்றனர். இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை அமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.