திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஒன்றியத்துக்கு உட்பட்ட முள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பாதையில் மின் கம்பம் ஒன்று சாய்ந்து காணப்படுகிறது. அதில் உள்ள மின்கம்பிகளும் தாழ்வாக செல்கிறது. தற்போது மழைக்காலமாக இருப்பதால் எந்த நேரத்திலும் கீழே சாய்ந்து ஆபத்து நடக்கலாம். ஆபத்து நடக்கு முன் மின்கம்பத்தை நிமிர்த்து நேர் செங்குத்தாக நட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், முள்ளிப்பட்டு.