திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் செவாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதூரில் சாலை வசதி ஏற்படுத்தும்போது மின்கம்பத்தை ஓரமாக அமைக்காமல் நடு ரோட்டிலேயே வைத்து சாலை அமைத்துள்ளனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அந்தச் செய்தி எதிரொலியால் மின்கம்பத்தை பிடுங்கி அப்பகுதியில் ஓரமாக நட்டுள்ளனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-கே.மூர்த்தி, செவாத்தூர் புதூர்.