அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் கிராமத்தில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. அந்தத் தொழிற்பேட்டை பகுதியில் பராமரிப்புப் பணிகள் செய்யப்படாத காரணத்தால் குப்பைகள் நிறைந்தும், புதர்கள் வளர்ந்தும் காணப்படுகிறது. இரவில் தெருவிளக்குகள் எரியாத காரணத்தால் தொழிற்சாலைக்கு வரும் பணியாளர்கள் பெரும் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. இப்பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள் ஏதும் இல்லாததால் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. சிட்கோ தொழிற்பேட்டை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
-குமார், அரக்கோணம்.