ஆக்கிரமிப்பு கட்டிடத்துக்கு சட்டவிரோத மின் இணைப்பு

Update: 2024-11-17 12:41 GMT

அரக்கோணம் தாலுகா மோசூர் கிராமத்தில் ரெயில் நிலையம் அருகில் நம்மனேரி ஏரி உள்ளது. அந்த ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டிடங்களுக்கு சட்டவிரோதமாக மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதனால், ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டிடங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்கக் கூடாது என அரசு ஆணை மற்றும் கோர்ட்டு உத்தரவுகள் உள்ள நிலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு தொடர்ந்து மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் நீர்நிலைப் பகுதி சுருங்கி விடும். வேளாண்மைப் பணிகள் முற்றிலுமாக முடங்கும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், மோசூர்.

மேலும் செய்திகள்