திருப்பத்தூரில் பாச்சல் மேம்பாலம் அருகில் காவல் துறை ஆயுதப்படை மைதானத்துக்கு செல்லும் சாலை பகுதியில் நான்கு வழி சந்திப்பு உள்ளது. அங்குள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த 2 வாரமாக எரியவில்லை. அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இருட்டாக இருப்பதை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. எரியாத உயர்கோபுர மின் விளக்குகளை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.ரூபன்ஜான்சசிகுமார், சமூக ஆர்வலர், திருப்பத்தூர்.