கே.வி.குப்பம் தாலுகா மேல்காவனூர் மதுரா மோட்டூர் கிராமத்தில் ஒரு மின்கம்பம் பல மாதங்களாகப் பழுதடைந்த நிலையிலேயே உள்ளது. இதுகுறித்து பசுமாத்தூர் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த மின்கம்பம் குடியிருப்புப் பகுதியில் இருப்பதால் குழந்தைகளுக்கும், கிராம மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அச்சம் உள்ளது. எனவே மின்வாரியத்துறையினர் பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பம் நட வேண்டும்.
-ராஜ்குமார்சம்பத், மேல்காவனூர்.