வேலூரை அடுத்த ஜாப்ராபேட்டை சுடுகாடு அருகே பாலாற்றில் இருந்து கழிஞ்சூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் மீது சிறிய பாலம் இருக்கிறது. இங்கு மின் விளக்கு வசதி இல்லை. அந்தப் பகுதியில் கழிவுகள் அதிகமாக கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சமூக விரோத செயல்களும் நடக்கிறது. கழிவுகளை கொட்டாமல் தடுக்க எச்சரிக்கை பலகையுடன் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-சந்தோஷ், ஜாப்ராபேட்டை.