அரக்கோணம்- காஞ்சீபுரம் மார்க்கத்தில் அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட ஏ.பி.எம். சர்ச் பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கு, பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கு இரவில் சரியாக எரியவில்லை. இந்தப் பகுதி இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்தச் சாலை வளைவான பகுதி என்பதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக உயர் கோபுர மின் விளக்கை சீர் செய்து எரியவிடுவார்களா?
-குமார், அரக்கோணம்