ஆம்பூர் மோட்டுக்கொல்லை பகுதியில் இருந்து துத்திப்பட்டு பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள தரை பாலத்தின் அருகே உள்ள உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் ஷூ தொழிற்சாலையில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பும் பெண்கள் இருளில் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே எரியாத உயர்கோபுர மின்விளக்குகளை எரியச்செய்ய மின்வாரிய அதிகாரிகள் முன்வரவேண்டும்.