மின்கம்பத்துடன் கால்வாய் அமைப்பு

Update: 2022-09-13 10:16 GMT


வேலூரை அடுத்த அடுக்கம்பாறை அருகே பென்னாத்தூர் பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம் மின்கம்பம் உள்ளது. இங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்கும்பணி நடக்கிறது. மின்கம்பத்தை அகற்றாமல் கால்வாயில் நடுப்பகுதியில் மின்கம்பத்தை வைத்து கழிவு நீர் கால்வாய் அமைக்கபட்டு உள்ளது. இதனால் கால்வாயில் வரும் குப்பைகள் தேங்கும் நிலை உள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்