திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா பெருமாள்பேட்டையில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. வீட்டின் மின்மீட்டர் 4 மாதமாக செயல்படாமல் உள்ளதாக புகார் தெரிவித்தும், இன்னும் மின் மீட்டரை மாற்றவில்லை. இதனால் மின்கட்டணம் அதிகமாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்மீட்டரை மாற்ற வேண்டும். இல்லையேல் அதிக கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்.
-பெ.சசிகுமார், வாணியம்பாடி, பாப்பானேரி.