வேலூர் பில்டர்பெட் ரோடு முதல் வலப்பக்க சந்தில் ஒரு மின்கம்பம் உள்ளது. கடந்த சில நாட்களாக செய்த பலத்த மழை மற்றும் காற்றின் காரணமாக அந்த இரும்பு மின் கம்பம் சாய்ந்த நிலையில் எந்த நேரத்திலும் உடைந்துவிழும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. இந்த வழியாகத்தான் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் பெண்ட்லேண்ண்ட் அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர். எனவே அசம்பாவிதம் நடைபெறுவதற்குள் இந்த மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.