ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த கோவிந்தச்சேரிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள ஒரு மின் கம்பத்தின் அடிப்பகுதி சிமெண்டு பூச்சு உதிர்ந்த நிலையில் சிதிலமடைந்துள்ளது. மழை, சூறைக்காற்று வீசினால் எந்த நேரத்திலும் மின்கம்பம் கீழே சாய்ந்து விடும் அச்சம் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்வாரியத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து புதிய மின் கம்பம் நடுவார்களா?
-காண்டீபன். கோவிந்தச்சேரிகுப்பம்.