வேலூர் மாவட்டம் லத்தேரியை அடுத்த ராமநாத ஈஸ்வரர் கோவில் அருகில் சூரிய ஒளி மின் தகடு (சேலார் பேனல்) ஊராட்சி நிர்வாகம் சார்பாக தெரு மின் விளக்குகளை எரிய விட அமைக்கப்பட்டது. அதில் செடி கொடிகள் படர்ந்து பராமரிப்பின்றி உள்ளது. அதன் அருகில் உள்ள மின்கம்பத்திலும் செடி, கொடிகள் படர்ந்துள்ளது. சூரிய ஒளி மின் தகடை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
பாரிவேந்தன், லத்தேரி.